ETV Bharat / state

திருவள்ளூரில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம்

திருவள்ளூர் புதுமாவிலங்கை ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 300க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

திருவள்ளூரில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம்

author img

By

Published : Aug 30, 2021, 6:13 PM IST

திருவள்ளூர்: கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் இந்தியா முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும், அக்டோபர் இறுதியில் கரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டது. ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இந்தாண்டுக்குள் 80% தடுப்பூசி

இந்த ஆண்டு இறுதிக்குள் 80 விழுக்காடு தடுப்பூசி போடப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்படுகிறது. இன்று (ஆக.30) கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுமாவிலங்கை ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஆர்வமாக வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இந்த முகாமை ஊராட்சித் தலைவர் தனலட்சுமி பாண்டியன் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவகுமார், வார்டு உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ரூ.477 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.