திருவள்ளூர்: ஊத்துக்கோட்டையை அடுத்த மாம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தாமரைச்செல்வன் - சரளா. இவரது மகள் அர்ச்சனா (26). இவர் பல் மருத்துவப் படிப்பு பயின்றுவருகிறார்.
இந்நிலையில் அர்ச்சனா, தான் காதலித்த இளைஞரைத் திருமணம் செய்துகொள்ள தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். இருப்பினும் காதல் திருமணத்துக்கு அவரது பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்து உயிரிழந்த தம்பதியர்
இதனையடுத்து தான் காதலித்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டு அர்ச்சனா வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் அவமானம் தாங்க முடியாத சரளா நேற்று (அக். 7) காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மனைவியின் உயிரிழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத தாமரைச்செல்வனும், வீட்டிலிருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஊத்துக்கோட்டை காவல் துறையினர், உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மகளின் காதல் திருமணத்தால், பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஏடிஎம் கார்டு மூலம் ரூ.40 ஆயிரம் திருட்டு