தமிழ்நாடு முழுவதும் இன்று நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து ஆவடியை அடுத்த நெமிலிச்சேரியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகிக்க தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது அப்பகுதி மக்கள், குடிநீர் சாலை வசதி வேண்டி கோரிக்கைகளை முன் வைத்தனர். அதனை விரைவில் சரி செய்து தருவதாக பாண்டியராஜன் வாக்குறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’தமிழ்நாடு முதலமைச்சர் ஒருவர் தொழில் வளர்ச்சிகளை ஈர்க்க வெளிநாடு செல்வது இதுவே முதல்முறை. ராகுல்காந்தி 2 மாதம் காணமால் போனது போல இல்லாமல் எங்கு போகவுள்ளர், எந்த நிறுவனங்களை சந்திக்கவுள்ளார் என்பதை கூறியுள்ளார் என்றார்.