ETV Bharat / state

சாலையை சீரமைக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் ஊராட்சியில் புதியதாக போடப்பட்ட சாலை சிதலமடைந்ததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்
author img

By

Published : Nov 19, 2019, 2:38 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் தேர்வழி ஊராட்சியில் தொடங்கி, நத்தம் ஊராட்சி வழியாக மேலக்காலனி ஊராட்சி வரை சுமார் மூன்று கிலோமீட்டர் சாலையை தார்சாலையாக மாற்ற 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு இரண்டு மாதத்திற்கு முன் தார்சாலை போடப்பட்டது.

சுமார் ஐந்து ஆண்டுகள் தாங்ககூடிய இந்த சாலையானது இரண்டு மாதமே ஆகியுள்ள நிலையில் சாலை சிதைந்துள்ளது.

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் இந்த சாலையை தரமாக போடாமல், அரசு ஒதுக்கிய பணத்தை கொள்ளையடித்த சாலை ஒப்பந்ததாரர்கள், அதற்கு துணையாக இருந்த அரசு அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நத்தம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் கும்மிடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கூடிய விரைவில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க : ஏரியைக் காணல சார்... கலெக்டரிடம் புகாரளித்த பொதுமக்கள்!

Intro:திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டி அடுத்த நஷ்டம் ஊராட்சியில் சாலையை சீரமைக்கக்கோரி கும்மிடிப் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம்.

Body:திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய சாலை தேர்வழி ஊராட்சியில் தொடங்கி நத்தம் ஊராட்சி வழியாக மேலக்காலனி ஊராட்சி வரை ஒன்றிய சாலை சுமார் 3 கிலோமீட்டர் நீளத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு இரண்டு மாதத்திற்கு முன் தார் சாலை போடப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்கு தாங்கும் சக்தி இருக்க வேண்டிய சாலை இரண்டு மாதத்திற்குள்ளாகவே மிகவும் மோசமான அளவிற்கு சிதைந்து உள்ளது. மேலும் தட்டான் ஏரி நீர் படத்துக்காக சாலையின் குறுக்கே போடப்பட்ட கல்வெட்டும் சிதைந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டு அனைத்து விதமான வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஏற்கனவே நேரடியாக சாலையை பார்வையிட்டு முழுவதும் சீரழிந்த தார் சாலையை மறுபடியும் ஓட்டு தரும்படியும் கல்வெட்டை சீரமைக்கும் பணியும் அரசு ஒதுக்கிய பணத்தை தேவையான அளவிற்கு செலவு செய்யாமல் பெரும் கொள்ளையில் ஈடுபட்ட கான்ட்ராக்டர் மீதும் துணை இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நத்தம் ஊராட்சி பொதுமக்கள் கும்மிடிபூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.