ETV Bharat / state

ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டுக் கம்பெனி இதன் முதலாளி மோடி -ப.சிதம்பரம் - lok sabha election 2019

திருவள்ளூர்: ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டுக் கம்பெனி, இதற்கு முதலாளி டெல்லியில் உள்ள மோடிதான் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

P Chidambaram election campaign in madhavaram
author img

By

Published : Apr 9, 2019, 12:42 PM IST

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மாதவரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, 'கருணாநிதி தலைமையிலான கூட்டணி ஐந்து முறை மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றதால் இந்தத் தேர்தலிலும் மகத்தான வெற்றிபெறும்.

தமிழ்நாட்டில் தற்போது உள்ள அதிமுக எம்ஜிஆர் கண்டெடுத்த, ஜெயலலிதா வழிகாட்டிய அதிமுக அல்ல. ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டுக் கம்பெனி. இதன் முதலாளி டெல்லியில் உள்ள மோடிதான்' என கூறினார்.

ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டுக் கம்பெனி இதன் முதலாளி மோடி -ப.சிதம்பரம் விமர்சனம்!

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மாதவரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, 'கருணாநிதி தலைமையிலான கூட்டணி ஐந்து முறை மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றதால் இந்தத் தேர்தலிலும் மகத்தான வெற்றிபெறும்.

தமிழ்நாட்டில் தற்போது உள்ள அதிமுக எம்ஜிஆர் கண்டெடுத்த, ஜெயலலிதா வழிகாட்டிய அதிமுக அல்ல. ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டுக் கம்பெனி. இதன் முதலாளி டெல்லியில் உள்ள மோடிதான்' என கூறினார்.

ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டுக் கம்பெனி இதன் முதலாளி மோடி -ப.சிதம்பரம் விமர்சனம்!
Intro:45 ஆண்டு காலமாக இல்லாத வேலையின்மை தற்போது இந்தியாவில் உருவாகி உள்ளதாக 4 கோடியே 70 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்தியா எழுந்து உள்ளது என்றும் இந்த ஒரு குற்றத்திற்காக பிரதமர் மோடிக்கு பெற்றோர்களும் இளைஞர்களும் தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழகத்தில் தற்போது உள்ள அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டுக் கம்பெனி இதன் முதலாளி டெல்லியில் உள்ளதாகவும் அவர் தான் மோடி என்று என்றும் யார் உண்மையான எதிரி தமிழினத்திற்கு குணத்திற்கும் துரோகி என்பதை உணர்ந்து மிகுந்த எச்சரிக்கையோடு வாக்களிக்க வேண்டும் என்றும் இந்த தேர்தலில் ஆந்திரா தெலுங்கானா புதுச்சேரி தமிழகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாஜகவிற்கு கிடைக்கப் போகுது பூஜ்யமே என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பேச்சு.


Body:திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில்.

ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தெரிவித்த அவர் கலைஞர் தலைமையிலான கூட்டணி ஐந்து முறை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாகவும். தோல்வியை கண்டதில்லை என்றும் வரலாறு தந்த அந்த நம்பிக்கையும் மக்கள் தரும் நம்பிக்கையும் இந்த தேர்தலில் மகத்தான வெற்றி இந்த கூட்டணி பெரும் என்றும்.

தமிழகத்தில் தற்போது உள்ளது எம்ஜிஆர் கண்டெடுத்த அதிமுக அல்ல ஜெயலலிதா வழிகாட்டிய அதிமுக அல்ல ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டு கம்பெனியின் முதலாளி டெல்லியில் உள்ளதாகவும் அவர் தான் மோடி என்றால் இவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மத்திய அரசின் ஒரு கைப்பாவையான அரசு நடைபெறுகிறது. புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடியை தமிழக அரசு இழப்பீடு கேட்டபோது 1150 கோடி மட்டுமே நிவாரணம் வழங்கியதாகவும் இபிஎஸ் ஓபிஎஸ் அதனை தட்டிக் கேட்காமல் வாய்பொத்தி கைகோர்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பதாகவும் டெல்லியின் கைப்பாவை அரசு இதைய் செயல்படுவதாகவும் தெரிவித்த அவர் தற்போது மீண்டும் ஒரு சுனாமி வந்து அடித்தாலும் ஓபிஎஸ் இபிஎஸ் அரசு கூட்டு கம்பெனி அசையாது என்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்னொரு தேர்தல் தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது என்றும். இன்னொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியை டெல்லி அமைந்தவுடன் சில வாரங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும். யார் உண்மையான எதிரி என்றும் தமிழினத்துக்கு குணத்திற்கு துரோகி என்பதை உணர்ந்து மிகுந்த எச்சரிக்கையோடு வாக்களிக்க வேண்டும் என்று பாஜக வடமாநிலத்தில் இந்தியா பேசும் 8 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது ஆனால் இந்த தேர்தலில் ஆந்திரா கேரளா தெலுங்கானா புதுச்சேரி தமிழகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிடைக்கப் போகுது பூஜ்ஜியமே என கூறிய அவர் 45 ஆண்டு காலமாக இல்லாத வேலையின்மை தற்போது இந்தியாவில் உருவாகியுள்ளதாகவும் 4 கோடியே 70 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்தியா இழந்து உள்ளது என்றும் இந்த ஒரு குற்றத்திற்காக பிரதமர் மோடிக்கும் பெற்றோர்களும் இளைஞர்களும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வேலைவாய்ப்பில் காலி இடங்களை காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 24 லட்சம் வேலை வழங்க முதல்கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுயமரியாதை பகுத்தறிவு கொள்கையை நிலைநாட்ட நல்ல அரசு மத்தியில் அமைப்பதற்கு கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்கு சேகரித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.