திருவள்ளூர்: தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு முழுவதும் சாதராண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அரசு அறிவித்தது.
இந்நிலையில், ஆண்களுக்கு ரூ.5 வசூலிக்கப்பட்ட கட்டணம் தற்போது ரூ.10ஆக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ராமஞ்சேரி, காஞ்சிப்பாடி, திருவாலங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழித்தடங்களில் இது போன்ற விதிமீறல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சாதாரண கட்டணப் பேருந்தில் உள்ள நடத்துனரிடம் நேரடியாக விசாரித்த போது, குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கத்தான் நிர்வாகம் தெரிவித்திருப்பதாகவும், 5 ரூபாய் கட்டணம் வசூலிக்க எந்த அரசாணையும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.