கரோனா நோயாளிகள் வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனைத் தொடர்ந்து, சிலர் ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரபாபு (64) என்பவர் ரெம்டெசிவிர் மருந்தை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகக் குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் முருகன், கஜேந்திரபாபுவைச் சந்தித்து அவசரமாக ரெம்டெசிவிர் மருந்து வேண்டும் என்று கேட்ட போது, ரூ. 25 ஆயிரத்திற்குத் தருவதாகக் கூறியுள்ளார். பணத்தைக் கொடுத்ததும் மருந்து எடுத்து வந்த ராஜேந்திரபாபுவை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து, அவரிடமிருந்த மூன்று ரெம்டெசிவிர் குப்பிகளைப் பறிமுதல் செய்து, அவரை திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரை வீரனுக்கு தடுப்பூசி