நிவர் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், சூரைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்திலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் நகரின் முக்கியப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் போல் மழைநீர் புரண்டோடியது. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. மேலும், நெல் வயல்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நிற்பதால், நெற்பயிர்கள் நீரில் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, விவசாய நிலங்களில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நிவர் புயலால் ஆம்பூரில் இயல்புவாழ்க்கை பாதிப்பு!