திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த அரக்கோணம் சாலையில் பெருமாள் தாங்கள் புதூர் கிராமம் உள்ளது அந்த கிராமத்தில் வசிக்கும் பெருமாள் என்பவர் தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி அன்று இவர் வீட்டில் இல்லாத நேரத்தில், இவரது மனைவி வீரலட்சுமி(45) மற்றும் மகன் போத்திராஜ்(10) இருவரையும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு 27 சவரன் நகை மற்றும் 11 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து பெருமாள் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி அவர்களின் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பெருமாள் பக்கத்து வீட்டில் வசித்து வரும் வெங்கட் என்பவரை விசாரணை செய்தப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து, மேலும் விசாரித்ததில் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த அவரது இரு கூட்டாளிகளைப் பற்றியும் தெரிவித்தார்.
காவல்துறையினர் அதனைத் தொடர்ந்து அரக்கோணம் பக்கத்தில் உள்ள டெல்லியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் உமாபதி என்பவரையும் கைது செய்தனர், மேலும் இவர்கள் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின் கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.