திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள எடப்பாளையம் கிராமத்தில் தேசிய பால் உற்பத்தி அபிவிருத்தி வாரியத்தில் (நேஷனல் டெய்ரி டெவலப்மன்ட் போர்டு) அமைந்துள்ளது.
மத்திய அரசு நிறுவனமான இதில் 2015ஆம் ஆண்டு முதல் 50க்கும் மேற்பட்ட நபர்கள் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். தற்போது அவர்களது ஒப்பந்த நிறுவனம் அனைவரையும் பணிநீக்கம் செய்துவிட்டு வேறு புதிய நபர்களை தற்போது பணிக்கு அமர்த்தி உள்ளனர்.
இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே தங்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் வலிவுறுத்தி நுழைவு வாயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஊரடங்கு நிலுவையில் உள்ள போது தங்களை பணி நீக்கம் செய்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உரிய ஊதியம் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.