ETV Bharat / state

‘எனது 3 மகன்களும் போலீஸில் வேலை செய்கிறார்கள்’.. நிலமோசடி தொடர்பாக மிரட்டல் விடுத்த குடும்பத்தினர்!

திருவள்ளூரில் ‘எனது 3 மகன்களும் போலீசில் வேலை செய்கிறார்கள்’ என நிலம் விற்பனை செய்வது தொடர்பான மோசடியில் ஈடுபட்ட குடும்பத்தினர் கிராம மக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

‘எனது 3 மகன்களும் போலீஸில் வேலை செய்கிறார்கள்’.. நிலமோசடி தொடர்பாக மிரட்டல் விடுத்த குடும்பத்தினர்!
‘எனது 3 மகன்களும் போலீஸில் வேலை செய்கிறார்கள்’.. நிலமோசடி தொடர்பாக மிரட்டல் விடுத்த குடும்பத்தினர்!
author img

By

Published : Aug 6, 2022, 10:31 AM IST

திருவள்ளூர் மாவட்டம் அரும்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் மனைவி அஞ்சலி என்பவரிடம் நிலத்தை வாங்க ரூ.8,82,000 விலை பேசியுள்ளார்.

மேலும் இதன் முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாயையும் , அடுத்த கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 3,82,000 ரூபாயையும் கொடுத்துள்ளார். ஆனால் ஏழுமலையிடம் நிலத்தை விற்பதாக சொல்லி பணத்தை வாங்கிய அஞ்சலி, பத்திரப்பதிவு செய்ய வராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால் தொடர்ந்து வற்புறுத்தியதையடுத்து, வாங்கிய பணத்தில் ரூ.3,82,000 கொடுத்துள்ளனர். ஆனால் மீதமுள்ள 5 லட்சம் ரூபாய தராமலே வந்துள்ளனர். பணம் கொடுத்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும், பணம் வராதது குறித்து அஞ்சலியிடம், ஏழுமலை கேட்டுள்ளார்.

அதற்கு பணத்தை வாங்கவே இல்லை என்றும், எனது 3 மகன்களும் போலீஸில் இருப்பதால் உன்னால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இதில் அஞ்சலியின் மகன்களான நரேஷ் திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்திலும், சுரேஷ் ஆவடி மாநகர காவல் அலுவலகத்திலும், கார்த்திக் புழல் மத்திய சிறை பிரிவிலும் வேலை செய்து வருகின்றனர்.

இதனிடையே விவசாயி ஏழுமலை, ஊராட்சி மன்றத் தலைவரான ஏ.ஆர்.வெற்றிவேலை அணுகியுள்ளார். இதனையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் என்ற முறையில் அஞ்சலியிடம் விசாரித்துள்ளார். அப்போது ஊராட்சி மன்றத் தலைவரை தகாத வார்த்தைகளால் அஞ்சலி பேசியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் வெற்றிவேலின் மகன்கள் மீது பொய் புகார் கொடுத்து மன உளைச்சலையும் ஏற்படுத்தி வந்துள்ளார், அஞ்சலி. இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்ற விவசாயி, தான் அறுவடை செய்த நெல்லை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.

அப்போது காவல்துறையில் பணியாற்றும் அஞ்சலியின் மகன்கள் மூன்று பேரும், தகாத வார்த்தைகளால் பேசியதுடன், இந்த தெரு வழியாக எங்களை கேட்காமல் வரக்கூடாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நிலம் வாங்க பணம் கொடுத்த ஏழுமலை, விவசாயி செல்வம், ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்ட அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 4) திருவள்ளூர் எஸ்பியிடம் புகார் மனுவை அளித்தனர்.

இந்த புகாரில், “நிலம் விற்பனை செய்வதாக ரூ.8,82,000 ஆயிரம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய அஞ்சலி என்பவர் மீதும், அவரது மகன்கள் 3 பேர் போலீஸில் வேலை செய்வதாக சொல்லி மிரட்டுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்கள் தங்கியிருக்கும் தெரு வழியாக செல்லும் விவசாயி மற்றும் பொது மக்களை மிரட்டும் போலீஸில் பணிபுரியும் நரேஷ், சுரேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குழந்தையின் மாமிசத்தையே தாய்க்கு உணவாக அளித்த ஐஎஸ்ஐஎஸ்ஸின் கொடூரச்செயல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.