முருகனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் காவடி சுமந்து சென்று முருகனை வழிபடுவர்.
இந்த ஆண்டிற்கான ஆடிக்கிருத்திகை திருவிழா வரும் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மலைக் கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள சரவண பொய்கை திருக்குளத்தில், தெப்பத் திருவிழா தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், குளத்தில் நீர் இன்றி பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் தற்போது பெய்து வரும் மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருக்குளம் வேகமாக நிரம்பி வருகிறது.
மேலும், பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரும் பணிகளை கோயில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முழுவீச்சில் நடந்து வருகின்றன.