ETV Bharat / state

ஆற்றில் குளிக்கச் சென்ற தாய், மகள் மாயம் - தேடும் பணிகள் தீவிரம் - கொசஸ்தலை ஆற்றில் தேடும் பணியில் தீவிரம்

தாமரைபாக்கம் கொசஸ்தலை ஆற்றில் குளிக்கச் சென்ற தாய், மகள் மாயமானதையடுத்து தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேடும் பணிகள் தீவிரம்
தேடும் பணிகள் தீவிரம்
author img

By

Published : Nov 16, 2021, 3:13 PM IST

திருவள்ளூர்: எல்லாபுரம் ஒன்றியம், புன்னப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் விஜயகுமார் என்பவரது மனைவி நிரோஷா (35) இவர்களுக்கு தர்ஷினி, வினிதா என்ற 2 மகள்கள் உள்ளனர். தனது கணவர் விஜயகுமார் இறந்துவிட்ட நிலையில், திருத்தணி பகுதியிலிருந்து பூக்களைக் கொண்டு சென்று ஆவடி பூ மார்க்கெட்டில் பூக்களை விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், மூத்தமகள் தர்ஷினி நிரோஷாவின் தாய் ஊரான கொப்பூரில் படித்து வரும் நிலையில், இரண்டாவது மகள் வினிதா விஜயகுமாரின் தாய் வீட்டிலிருந்து, புண்ணபாக்கம் பகுதியில் உள்ள தாய் நிரோஷா வீட்டிற்கு நேற்று(நவ.15) திரும்பியுள்ளார்.

இதனையடுத்து நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் நிரோஷா தனது இளைய மகள் வினிதாவுடன் இருசக்கர வாகனத்தில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் பகுதியிலுள்ள கொசஸ்தலை ஆறு கீழ் எல்லைப்பகுதியில் தங்கள் காலணிகளை இருசக்கர வாகனத்தின் அருகில் விட்டு விட்டுக் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து இருசக்கர வாகனம் மற்றும் காலணிகள் தனியாகக் கிடப்பதையும், ஆள்கள் யாரும் இல்லாததை அறிந்த அக்கம் பக்கத்தினர் வெங்கல் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். பூண்டி ஏரியிலிருந்து சுமார் 6 ஆயிரம் கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுவதால் தாயும், மகளும் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குத் தீயணைப்பு படையினர் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க:Defamation case - நீதிமன்றத்தில் ஆஜரான ஹெச்.ராஜா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.