திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கமலா திரையரங்கு அருகில் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டுமென திருத்தணி நகர திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், திருவள்ளூர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் சந்திரன், திருத்தணி நகர செயலாளர் எம். பூபதி ஆகியோர் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து போட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
குறிப்பாக இஸ்லாமிய பெண்களும் அதிகளவில் பங்கேற்றனர். மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு துணைபோகும் அதிமுக அரசை அகற்ற வேண்டும், மக்கள் உரிமையைப் பாதுகாக்க வேண்டும், இந்திய தேசிய குடியுரிமைச் சட்டத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் இஸ்லாமியர்கள், அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இணைந்து மத்திய அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி சட்டத்தைத் திரும்பப் பெறச் செய்யும்வரை இந்தப் போராட்டம் தொடரும் என ஜெகத்ரட்சகன் தெரிவித்தார்.
இதையும் படியுங்க:
'தமிழ்நாடு அரசு மக்களுக்கு பச்சை துரோகம் செய்துள்ளது' - அப்துல் சமது