ETV Bharat / state

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அமையவுள்ள இடத்தை ஆய்வுசெய்த அமைச்சர்!

திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் அமையவுள்ள திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கான இடத்தை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், அம்மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அமையயுள்ள இடத்தை ஆய்வு செய்த அமைச்சர்!

author img

By

Published : Feb 25, 2020, 7:25 PM IST

திருவள்ளூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் சுமார் 22 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது. இதற்கான இடம் தேர்வுசெய்யப்பட்டு தற்போது சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், இன்று பிற்பகலில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்டோர் ஆய்வுசெய்தனர். ஆய்வின்போது இடத்தின் வரைபடத்தை வைத்து ஆங்காங்கே அமையவுள்ள பகுதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம், அமைச்சர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து வாகன போக்குவரத்து வசதி, வாகன நிறுத்துமிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டன.

திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அமையயுள்ள இடத்தை ஆய்வு செய்த அமைச்சர்!

இதையும் பார்க்க: ஆர்யாவுடன் புதிதாக கமிட்டாகியுள்ள இளம் நடிகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.