தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, யாதவர் சமூகம் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அமைச்சர் செல்லூர் ராஜுவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, யாதவர் சமூகத்திடம் அமைச்சர் செல்லூர் ராஜு பொது மன்னிப்பு கேட்க வேண்டும், சாதி வன்முறையை தூண்டும் விதமாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு யாதவ மகாசபை நிர்வாகிகள் எச்சரித்தனர்.