ETV Bharat / state

'விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் புதிதாக உருவாக வேண்டும்' - அமைச்சர் பேச்சு

திருவள்ளூர்: உணவு உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்க 128 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து சாதனை படைக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் புதிதாக உருவாக வேண்டும் என தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் விருப்பம் தெரிவித்தார்.

அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு
author img

By

Published : Sep 4, 2019, 7:27 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திரு ஊர் நெல் ஆராய்ச்சி கழகத்தின் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை துறையினரால் நீர் மேலாண்மை விழிப்புணர்வு திட்டத்தை குத்துவிளக்கேற்றி அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த விவசாயக் கண்காட்சியை பார்வையிட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், 128 லட்சம் மெட்ரிக் டன் விளைபொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவில் தமிழ்நாடு சாதனை படைக்கவேண்டும் என்றார். 12 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் திகழ வேண்டும் என்று சொன்ன அவர், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக வேண்டும் என்றார்.

அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு

பின்னர் அமைச்சர் பெஞ்சமின், மழை பொய்த்துவிட்டதனால் விவசாயம் செய்ய முடியவில்லை என்றும் குறைந்த நீரை கொண்டு கீரை, காய்கறி உள்ளிட்ட மாற்று வகை பயிர்களை பயிரிட்டு பயனடைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு மானியம் மூலம் பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கி முன்னோடி மாநிலமாக விளங்குவதாக கூறிய அவர், குடிமராமத்து திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அது மக்கள் இயக்கமாக மாறி உள்ளதாகவும் குறிப்பிட்டார். நீர் மேலாண்மை திட்டம் வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான சிறந்த வரவேற்பைப் பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Intro:உணவு உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்க 128 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து தமிழகம் சாதனை படைக்க வேண்டும் என்றும் அதற்கு திருவள்ளூர் மாவட்டம் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த 10 தொழிற்சாலைகள் உருவாக வேண்டும் எனவும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

Body:உணவு உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்க 128 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து தமிழகம் சாதனை படைக்க வேண்டும் என்றும் அதற்கு திருவள்ளூர் மாவட்டம் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த 10 தொழிற்சாலைகள் உருவாக வேண்டும் எனவும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

மழை பொய்த்து விட்டது அதனால் கூட மூன்று போகம் விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகளிடம் வேதனை தெரிவித்த தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின்.

திருவள்ளூர் மாவட்டம் திரு ஊர் நெல் ஆராய்ச்சி கழகத்தின் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை துறையினரால் ஜல் சக்தி அபியான் மேலா நீர் மேலாண்மை விழிப்புணர்வு திட்டத்தை குத்துவிளக்கேற்றி அமைச்சர்கள் பாண்டியராஜன் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் துவக்கி வைத்தனர் .
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த விவசாயக் கண்காட்சியை பார்வையிட்டனர்.

இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில் 128 லட்சம் மெட்ரிக் டன் விளைபொருட்களை உற்பத்தி செய்து இந்தியாவில் தமிழகம் சாதனை படைக்கவேண்டும் 12 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் திகழ வேண்டும் என தெரிவித்தார் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக வேண்டும் என்றார் பின்னர் பேசிய ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் மழை பொய்த்துவிட்டது தன்னால் கூட 3 போகம் விவசாயம் செய்ய முடியவில்லை என்றும் குறைந்த நீரை கொண்டு கீரை காய்கறி உள்ளிட்ட மாற்று வகை பயிர்களை பயிரிட்டு பயன் அடைய வேண்டும் என்றும் தமிழக அரசு மானியம் மூலம் பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்கி முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என்றும் குடிமராமத்து திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அது மக்கள் இயக்கமாக மாறி உள்ளதாகவும் நீர் மேலாண்மை திட்டம் வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான திட்டம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெறும் என அவர் தெரிவித்தார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.