திருவள்ளூர் சி.எஸ்.ஐ., கவுடி மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்.
இந்நிகழ்வில், அமைச்சர் பெஞ்சமின் பேசியதாவது:
திருவள்ளூரில் வருகிற மார்ச் 8ஆம் தேதி புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவுள்ளது. அங்கு வருகின்ற கல்வி ஆண்டிலேயே மருத்துவப் படிப்பில் சேர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, திருவள்ளூரில் அரசு பொறியியல் கல்லூரியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொத்தடிமை தொழிலாளர்களின் முன்னேற்றம், பாதுகாப்புக்கான சமுதாயக் காவல் திட்டம் தொடக்கம்!