ETV Bharat / state

கும்மிடிப்பூண்டியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அமைச்சர் சர்ப்ரைஸ் விசிட்: ஆக்டிங் கொடுத்த அதிகாரிகள் ! - Anbil Mahesh visited HSC school in thiruvallur

Minister Anbil mahesh poyyamozhi: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு முடித்து அமைச்சர் சென்றவுடன், அங்கிருந்த தூய்மை பணியாளர்கள் பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்யாமல் கிளம்பியது ஆசிரியர் மற்றும் அங்குக் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

minister anbil mahesh poyyamozhi-visited-higher-secondary-school-for-inspection-in-gummidipoondi
கும்மிடிப்பூண்டியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அமைச்சர் சர்ப்ரைஸ் விசிட்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 10:12 PM IST

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று(டிச.12) திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியின் கட்டுமான வசதிகள், காற்றோட்டமான வகுப்பறை வசதிகள், ஆய்வகங்கள், கழிவறைகள் மற்றும் விளையாட்டு மைதானம் குறித்து நேரடி கள ஆய்வில் ஈடுபட்டார்.

ஆய்வின் போது பள்ளி நிர்வாகத்தின் சார்பாகப் பள்ளிக்கு ஆய்வகம் அமைத்துத் தர அமைச்சரிடம் கோரிக்கை எழுப்பப்பட்டதையடுத்து, பள்ளிக்கு ஆய்வகம் கட்டித்தருவதற்கான ஏற்பாடு விரைவில் நடைபெறும் என உறுதியளித்தார். மேலும் பள்ளி சார்பில் பல ஆண்டுகள் கோரிக்கையான விளையாட்டு மைதானத்திற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மைதானம் அமைக்க உத்தரவிட்டார்.

அதனையடுத்து கோரிக்கை மீதான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் பட்டூர் ஆசிரியர் குழு நிர்வாகிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவர்களின் வகுப்பறைகளை ஆய்வு செய்த அமைச்சர், மாணவர்களிடம் அவர்களின் படிப்பு திறனைச் சோதித்தார். தொடர்ந்து, பள்ளியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாராட்டினார்.

தூய்மை பணியாளர்கள் பணியைச் செய்கிறார்களா.. ஆக்டிங் கொடுக்கிறார்களா..மக்கள் ஆவேசம்: பின்னர், ஆய்வு முடித்து அமைச்சர் சென்றவுடன், அவரைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்யாமலே கும்மிடிப்பூண்டி பேரூராட்சி ஊழியர்களும் சென்றது பள்ளி நிர்வாகத்தின் மத்தியிலும், ஆய்வின்போது பங்கேற்ற பொதுமக்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக அமைச்சர் நிகழ்வின் போது தூய்மை பணியில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் தூய்மை பணியாளர்கள் கையுறை இல்லாமலும், முககவசம் இல்லாமலும் பணியில் ஈடுபட்டது குறித்து கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்த நிலையில் தற்போது, தூய்மைப் பணியாளர்களின் இந்த செயல் குறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக அமைச்சர் அந்தப்பகுதியில் வெள்ள நிவாரணம் குறித்தும் அருகிலிருந்த தெருக்களில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விரைவில் திறப்புக்கு தயாரான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. முதற்கட்டமாக 100 பேருந்துகள் சோதனை ஓட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.