ETV Bharat / state

நெருங்கும் பேரவைத் தேர்தல்: அதிமுகவில் தீவிர உறுப்பினர் சேர்க்கை

திருவள்ளூர்: இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றுவருகிறது.

அதிமுகவில் தீவிர உறுப்பினர் சேர்க்கை
அதிமுகவில் தீவிர உறுப்பினர் சேர்க்கை
author img

By

Published : Nov 11, 2020, 6:18 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட நல்லாத்தூர், வயலூர், உளுந்தை, கூவம் சத்தரை ஆகிய ஊராட்சிகளில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் கடம்பத்தூர் ஒன்றியச் செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்டச் செயலாளருமான பி.வி. ரமணா கலந்துகொண்டு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கிவைத்தார்.

இதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, "படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும், அதுபோன்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அரசியல் கட்சியில் இணைந்தால் அவர்களால் தெளிவாகச் சிந்தித்து நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும்.

ஆகையால் இளைஞர்கள் அனைவரும் ஆர்வமுடன் அரசியலில் இணைந்து அரசியலைக் கற்றுக்கொண்டு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும்" என்றார்.

இதைத்தொடர்ந்து மிகவும் பின்தங்கியுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு ஆன்லைன் வகுப்பிற்காக புதிய மொபைல் போனை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சிற்றம் சீனிவாசன், நரேஷ் குமார், இன்ப நாதன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சர்க்கரை வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.