உலக நாடுகளையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதிவரை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும், விடுமுறை, திரையரங்குகள், மால்கள் திறக்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே போன்று தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலத்திற்கோ, வெளி நாட்டிற்கோ யாரும் செல்லவோ, வரவோ கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு ரயில்கள், விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு கிர்கிஸ்தான், ரஷ்யா போன்ற வெளி நாடுகளிலிருந்து 13 இஸ்லாமியர்கள் வந்துள்ளனர். இதனையறிந்த ரயில்வே காவல் துறையினர் அவர்களை ரயில் நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்க மறுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் (DSP) கங்காதரன், அவர்களை மருத்துவர்களை கொண்டு சோதனையிட்டார்.
சோதனையில் சளி, இருமல், மற்றும் காய்ச்சல் போன்ற எந்த அறிகுறியும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: வெளிநாட்டு பயணிகள் விமானம் இந்தியாவிற்குள் நுழைய மார்ச் 22 முதல் தடை!