மே தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
அந்த வகையில், திருவள்ளூர் பணிமனையில் அதிமுக சார்பில் சிறப்பு மே தின விழா நடைபெற்றது. இதை தலைமை தாங்கி நடத்திய மத்திய இணைச் செயலாளர் ரவிக்குமார் தொழிலாளர்களின் சங்க கொடியை ஏற்றி வைத்தார். மேலும், அங்குள்ள அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.