திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தசரத நகர் கொக்கு மேடு பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் திருடிச் செல்வது அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் கமலம்மா என்பவரது வீட்டில் ரூ. 50 ஆயிரம், புஷ்பா என்பவரது வீட்டில் ரூ. 2000 ஆகியவற்றை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொக்கு மேடு பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி முகமூடி கொள்ளையர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலை கேட்டுச்சென்று நோட்டமிட்டு கொள்ளையடித்த தாய், மகன் கைது