உலகம் முழுவதும் கரோனா வைரசின் பாதிப்பு அதிகமாகி வருகிறது, இந்நிலையில் திருவள்ளூரை அடுத்த கடம்பத்துாரில் கரோனா வைரஸ் காரணமாக முகத்தில் அணியும் முகக்கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மகளிர் சுய உதவிக்குழுவினர் அதை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதுமாவிலங்கை ஊராட்சியில் பூக்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளனர். இவர்கள் தமிழக அரசின் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கடன் பெற்று துணி பைகளை ஆர்டரின் போில் தைத்துக் கொடுக்கும் தொழில் செய்து வருகின்றனர். 12 பெண்கள் ஈடுபட்டுள்ள இப்பணியில் முதற்கட்டமாக 3 தினங்களில் 3000க்கும் அதிகமான முகக்கவசங்களை தயார் செய்துள்ளனர்.
இந்நிலையில் முகக்கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் விலை 200 ருபாய் வரை விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கடைகளில் ரூ. 5க்கு விற்ற முகக்கவசம் தற்போது 8 முதல் 10 ருபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கரோனா: ஊடகவியலாளர்களுக்கு முகக்கவசம் வழங்கிய ஸ்டாலின்