திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் அலமேலு அம்மன் குறுக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்திவந்தார். அந்த கடை இருக்கும் கட்டடத்தின் உரிமையாளரின் மகள், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இந்த நிலையில் அவர் குளிக்கும்போது சதீஷ்குமார் ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதைக்கேட்ட வெளியவந்த பெண்ணின் குடும்பத்தார் சதீஷ்குமாரிடம் இருந்து செல்போனை பிடுங்கனர். அதன்பின் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். அ
இதனிடையே சதீஷ்குமாரின் பஞ்சர்கடையை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் பாரதி விக்னேஷ் , ராஜேந்திரன் ஆகிய 3 பேரும் அடித்து நொறுக்கி, அங்கிருந்த 2 வாகனங்களை பெட்ரோலை ஊற்றி கொளுத்தினர். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மின்வேலியில் சிக்கி பலியான சிறுத்தை ; ஓ.பி.ரவீந்திரநாத் தோட்டத்தில் விதி மீறலா...?