ETV Bharat / state

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியருகே மொய் பணத்தை திருடிய நபர் கைது! - gummidipoondi moi money

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிச்சென்ற நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

gummidipoondi moi money theft
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியருகே மொய்பணத்தை திருடிய நபர் கைது
author img

By

Published : Nov 1, 2020, 10:18 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நவீன், ஆந்திர மாநிலம் தடாவை சேர்ந்த பிந்து ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கவரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்த அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அன்பளிப்பு பணத்தை மணமக்களிடம் வழங்கிய நிலையில், மணமக்கள் அதனை வாங்கி தங்களது உறவினர்களிடம் கொடுத்து வந்தனர்.

இரவு மணமேடை அருகே வந்த அடையாளம் தெரியாத நபர் தான் இரவு உணவு சாப்பிட்டேன், நீங்கள் சாப்பிடுங்கள் என உறவினரை அனுப்பி வைத்து விட்டு அன்பளிப்பு பணத்தை வாங்கி வைத்துள்ளார். சற்று நேரத்தில் மொய் கவர்கள் அடங்கிய சுமார் ஒரு லட்ச ரூபாயை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து நவீன், பிந்து ஆகியோரின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கவரப்பேட்டை காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டையின் பின்னர் தேர்வாய் பகுதியைச் சார்ந்த ஈசன் என்கிற வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.