திருவள்ளூர் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் போல் நடித்து, ஏமாற்றிய பொற்செல்வன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். திருவள்ளூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆக்டிங் டிரைவராக பணியாற்றிய பொற்செல்வன், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இவர் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநராக பணிக்குச் செல்லாத நேரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார்.
இதன்மூலம் பொற்செல்வன் வாகன ஓட்டிகளை மடக்கி, தன்னை ஆர்டிஓ எனக் கூறிக்கொண்டு வசூல் வேட்டை நடத்தி உள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் வந்ததையடுத்து, விசாரணை மேற்கொண்ட திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர், பொற்செல்வன் சொகுசு கார், புல்லட், 2 சக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு வசூலில் ஈடுபட்ட போது, கையும் களவுமாக பிடித்த தாலுக்கா காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் வாகனங்களையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பொற்செல்வனை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கு: நால்வருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!