ETV Bharat / state

பழங்குடி மக்களுக்கு உணவு பொருள்கள் வழங்கிய அறக்கட்டளை - Humanitarian Foundation that provided food items to tribal people

திருவள்ளூர்: ஊரடங்கு உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு மனித அறக்கட்டளை சார்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

makkal_thoundu_nirvanam
makkal_thoundu_nirvanam
author img

By

Published : Apr 6, 2020, 3:36 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் ஊராட்சியில் 60-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் கராேனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. இதனால், தினந்தோறும் வேலைக்கு சென்றால் தான் கூலி என்ற நிலையில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது மட்டுமில்லாமல் பசியும் பட்டினியுமாக கிடக்கும் அவலநிலையும் ஏற்பட்டது.

இவர்களது நிலைமையை அறிந்த மனித அறக்கட்டளையைச் சார்ந்த அனைவரும் அந்த இடத்திற்கு சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், 20 நாள்களுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள், பருப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர், சங்க நிர்வாகி திருமால், விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விளக்கேற்றுவதால் அறிவியல் ரீதியாக நன்மை உண்டா? மோடிக்கு குமாரசாமி கேள்வி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.