ETV Bharat / state

இறந்த கணவரின் உடலை பட்டா நிலத்தில் புதைத்த வழக்கு: முழு அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு - பட்டா நிலம்

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி, மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதி இருந்தபோதும், மயானமாக அறிவிக்கப்படாத பகுதியில் சடலங்களை அடக்கம் செய்யலாமா என்பது குறித்த வழக்கை, முழு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
madras high court
author img

By

Published : Jun 9, 2023, 6:27 AM IST

சென்னை: தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி, மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதி இருந்தபோதும், மயானமாக அறிவிக்கப்படாத பகுதியில் சடலங்களை அடக்கம் செய்யலாமா என்பது குறித்த வழக்கை, முழு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்த பாபு நாயுடு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களது கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக தனியாக மாயனம் உள்ள நிலையில், ஜெகதீஷ்வரி என்பவர் உயிரிழந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்ததாகவும், புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து, மயானத்திலேயே புதைக்க ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பஞ்சாயத்து சட்டப்படி, பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது எனக் கூறி, உடலைத் தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெகதீஷ்வரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மயானமாக அறிவிக்கப்படாத இடங்களில் சடலங்களை புதைக்க, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சட்ட விதிகளில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சடலங்களை புதைக்க வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளதாக தனி நீதிபதி முன் வழக்கு தொடர்ந்த பாபு நாயுடு தரப்பில் வாதிடப்பட்டது.

இவ்வாறான இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கிராமத்தில் மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதி இருந்தபோதும், கிராம பஞ்சாயத்து சட்ட விதிகளின் கீழ் மயானமாக அறிவிக்கப்படாத பகுதியில் சடலங்களை புதைக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய, வழக்கை முழு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஊட்டி மலை ரயில் தடம் புரண்டது..! நடுவழியில் பயணிகள் அதிர்ச்சி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.