திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ஈசன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அம்பத்தூரில் தனியார் தொழிற்சாலை நடத்திவருகிறார். நேற்று (செப்டம்பர் 29) வழக்கம்போல் காலை 9 மணிக்கு தொழிற்சாலைக்கு சென்றுவிட அவரது மனைவி சசிகலா வீட்டை பூட்டிவிட்டு காலை 11:30 மணியளவில் வங்கி சென்றவர் 12:50மணிக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 29 சவரன் நகைகள், லேப்டாப் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
ஒரு மணி நேரம் 20 நிமிடத்தில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை! - கொள்ளை வழக்கு செய்திகள்
திருவள்ளூர்: வீட்டின் பூட்டை உடைத்து 29 சவரன் நகைகள், லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.