திருவள்ளூர்: திருத்தணி அருகே உள்ள மாமண்டூர் பகுதியில் அரசு மதுபான கடை(Tasmac) செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளர் வெங்கடேசன், விற்பனையாளர்கள் நாகராஜ் மற்றும் முரளி ஆகியோர் விற்பனையை முடித்துவிட்டு நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், நள்ளிரவில் டாஸ்மாக் கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கனகம்மா சத்திரம் போலீசார் கடை பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை பிளாஸ்டிக் தம்ளர் கொண்டு மூடிவிட்டு பக்கவாட்டு சுவறை துளையிட்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து இன்று காலை கடையின் மேற்பார்வையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு பெட்டியில் இருந்த 96 பாட்டில்கள் மற்றும் கடையில் இருந்த ஐந்தாயிரம் பணத்தை திருடிய திருடிய பலே கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கடையில் ஏற்கனவே ஒருமுறை திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்டியல் இனத்தவரை துணை முதலமைச்சராக்க வேண்டும்: வானதி சீனிவாசன்