ETV Bharat / state

பொறுப்பின்றி சீக்கிரமாக மூடப்பட்ட டாஸ்மாக் - கொந்தளித்த மதுப்பிரியர்கள் - டாஸ்மாக் கடை ஊழியர்

கும்மிடிப்பூண்டி அருகே விற்பனை நேரத்திற்குள் டாஸ்மாக் கடையை மூடியதால், டாஸ்மாக் ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

Etv Bharat டாஸ்மாக் கடை ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம்

author img

By

Published : Feb 16, 2023, 10:57 PM IST

டாஸ்மாக் கடை ஊழியர்களுடன் மது பிரியர்கள் வாக்குவாதம்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர், சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் அரசு டாஸ்மார்க் கடை எண் 9114 இயங்கி வருகிறது. இந்த கடையில் மதுபாட்டில் ஒன்றுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை நடைபெறுவதாக பலமுறை சமூக வலைத்தளங்களில் வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வந்தது.

இந்நிலையில் நேற்று (பிப்.15) மாலை சுமார் 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை விற்பனை நேரத்தில் டாஸ்மாக் கடை மூடியதாக கூறப்படுகிறது. இதனால், மது பிரியர்களின் கூட்டம் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் மதுபான கடையை திறந்த ஊழியர்களுடன் விற்பனை நேரத்தில் கடையை மூடியதற்கான சரியான காரணம் தெரிவிக்க வேண்டும் என மது பிரியர்கள் மதுபான கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதேபோல் அரசு மதுபான கடையை மூடிய நேரத்தில், அரசு மதுபான கடை ஊழியர்களின் உதவியுடன் டாஸ்மாக் கடையை ஒட்டி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பாரில் மது பாட்டில்கள் 100 ரூபாய் கூடுதல் விலைக்கு பெற்றதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து டாஸ்மார்க் கடையை விட்டு வெளியேற முடியாமல் திகைத்த டாஸ்மார்க் ஊழியர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலைய காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆரம்பாக்கம் காவல் துறையினர் மது பிரியர்களை சமரசம் செய்து வெளியேற்றியதாக தெரிகிறது.

மேலும், கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே இந்த மதுபான கடை அமைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், சாலை ஓரத்தில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு மது அருந்தச் செல்கின்றனர். இதனால், இந்த மதுபான கடையை ஒட்டிய பகுதிகளில் விபத்துக்கள் அடிக்கடி அரங்கேறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வேலூர் பேருந்து நிலையத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.