திருவள்ளூர்: பழவேற்காட்டைச் சேர்ந்தவர் ஷாஜஹான் (65). பஜார் பகுதியில் பஞ்சர் கடை நடத்திவந்தார். இவர் வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவதாக, திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் மஹிதாவுக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, ஷாஜஹான் வீட்டில் காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது இரண்டு பேரல்கள், இரண்டு பானைகளில் சாராய ஊறல் இருப்பது தெரியவந்தது.
கேன்களில் ஊற்றி பதுக்கப்பட்டிருந்த 20 லிட்டர் சாராயமும் பறிமுதல்செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஷாஜகானை கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: சினிமா வாய்ப்பு: இளம்பெண் பாலியல் வன்புணர்வு?