ETV Bharat / state

திருவள்ளூர் கொலை வழக்கு - இளைஞருக்கு ஆயுள் தண்டனை! - thiruvallur murder

திருவள்ளூர்: கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

murder acquest
author img

By

Published : Apr 27, 2019, 7:36 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்காவைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரும் இவரது நண்பர் சம்பத்தும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் எல்லைக்குட்பட்ட வள்ளுவர் கிராமத்தில் வீடு எடுத்து தங்கி மீஞ்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இளைஞருக்கு ஆயுள் தண்டனை

இவரது வீட்டின் அருகே வசித்து வந்த வினோத் என்பவருக்கும் ரஞ்சித்துக்கும் இடையே கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட மோதலில், ரஞ்சித் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக வினோத் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கின் விசாரணை திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கின் விசாரணை இன்று முடிவடைந்ததையடுத்து, வினோத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

27-04-2019

திருவள்ளூர் மாவட்டம் செய்தியாளர் சுரேஷ்பாபு

திருவள்ளூர் அருகே முள்ளு செடி வெட்டி வீட்டு வாசலில் போட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
 கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்காவைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரும் இவரது நண்பர் சம்பத்தும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட வள்ளுவர் கிராமத்தில் பட்ட மந்திரி பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தனர். இவர்கள் மீஞ்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் வினோத் என்கிற குடியரசு 25 இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வினோத்தின் வீட்டின் முன்பு முள்ளு செடி வெட்டிப் போட பட்டு இருந்தது அந்தச் செடியை ரஞ்சித் என்பவர் போட்டதாக கூறி வினோத் ரஞ்சித்திடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி இரவு ரஞ்சித்தும் அவரது நண்பர் சம்பத்தும் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள பட்ட மந்திரி அரசு பள்ளி மைதானம் அருகே வினோத் நின்றிருந்தார். அவர் ரஞ்சித்தை பார்த்ததும் தகாத வார்த்தைகளால் திட்டி முள்ளு செடி போட்டது குறித்து மதுபோதையில் திட்டியுள்ளார். 
 அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் அருகிலிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து வினோத் ரஞ்சித்தின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித்தை  திருவெற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 10ஆம் தேதி காலை ரஞ்சித் உயிரிழந்தார். இதுகுறித்து சம்பத் கொடுத்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராம்குமார் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்து இன்று மாவட்ட நீதிபதி செல்வநாதன் தீர்ப்பளித்தார். அதில் ரஞ்சித்தை தகாத வார்த்தையால் பேசி உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

VISUAL SEND IN MOJO.....
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.