நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தேர்தல் அலுவலகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதில் ஒரு அங்கமாக இன்று திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சென்று 100 விழுக்காடு வாக்குப்பதிவு உறுதி செய்யும் காணொளி விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த பிரசார வாகனம் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடக்கும் வரை, அனைத்து பகுதிகளுக்கும் சென்று காணொளி மூலம் வாக்காளர்களின் கடைமைகளைக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.