வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த சீனிவாசன்(40) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (32) என்ற பெண்ணும் திருவள்ளூர், மப்பேடு அருகே கட்டடப் பணி செய்துவருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 7ஆண்டுகளாக பழகிவருகின்றனர்.
இந்நிலையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி நேற்று இரவும் ஏற்பட்ட தகராறில், வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த சீனிவாசன் ஆத்திரத்தில் திடீரென மகாலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர், காலையில் அவ்வழியே சென்றவர்கள் பெண் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த மம்பேடு காவல் துறையினர் பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு, இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சீனிவாசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.