திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மம்தா பானர்ஜி போல உடையணிந்த நர்மதா என்ற பெண், அங்கிருந்த காந்தி சிலையை டெட்டால் ஊற்றி சுத்தம் செய்தார். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை ஆய்வாளர் மகேஸ்வரி, நர்மதாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இவ்வாறு செயல்படக்கூடாது என்று அவரை எச்சரித்தின்னர்.
தனது நூதன போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நர்மதா, "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக வடமாநிலங்களில் நிகழ்ந்துவரும் வன்முறை வெறியாட்டங்களால் பொது சொத்துக்கள் பெரும் சேதமடைந்ததுள்ளன. இதைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசியல் கட்சியினர் போராட்டத்தை தூண்டும் விதமாக பேசிவருவகின்றனர்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போன்றோர் வன்முறையை தடுக்க தவறியதால் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. தற்போது சாராய ஆலைகளை வைத்து தொழில் செய்பவர்கள்கூட எளிதாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பாக போராட்டம் நடத்துகின்றனர் . இது அகிம்சையை போதித்த காந்தியை அவமதிக்கும் செயல்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை குறி வைத்தே போராட்டங்களும் பேரணிகளும் நடக்கின்றன. மாணவர்களை தூண்டிவிடுவதை எதிர்க்கட்சிள் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: சிறந்த நிர்வாகத்தில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு