ETV Bharat / state

தமிழ்நாடு எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்!

author img

By

Published : May 29, 2020, 11:58 AM IST

திருவள்ளூர்: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழ்நாடு எல்லையை வந்தடைந்தது.

தமிழ்நாடு எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர்

தெலுங்கு கங்கா ஒப்பந்தத்தின்படி ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு இரண்டு தவணைகளாக கண்டலேறு அணையிலிருந்து 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க தமிழ்நாடு-ஆந்திர அரசுகளிடையே ஒப்பந்தம் போடப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டு 7.5 டி.எம்.சி தண்ணீர் வந்தடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டது.

சென்னைக்கு தொடர்ந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடுமாறு தமிழ்நாடு அரசு ஆந்திர அரசிற்கு கோரிக்கை விடுத்தது. அதையடுத்து கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீரினை ஆந்திர அரசு கடந்த 25ஆம் தேதி திறந்துள்ளது.

இந்த நீர் 152 கி.மீ. தொலைவில் உள்ள தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டிற்கு இரவு வந்தடைந்தது. இந்தத் தண்ணீரை பொதுப்பணித் துறை அலுவலர்கள் பூஜை செய்து மலர் தூவி வரவேற்றனர்.

ஜீரோ பாயிண்ட்டை வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர் 25 கி.மீ தொலைவில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தை இன்று மாலை சென்றடையும் என பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்த நீர் பூண்டி நீர் தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டு பின்னர் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு அனுப்பி சென்னை மக்களின் குடிநீருக்கு பயன்படுத்தப்படும். தமிழ்நாட்டிற்கு 0.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட திட்டமிடப்பட்டுள்ளதாக ஆந்திர பொதுப்பணித் துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பலகோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதலமைச்சர் அடிக்கல்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.