ETV Bharat / state

ஜீரோ பாய்ண்ட் வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர் -மலர் தூவி வரவேற்பு! - minister velumani

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் ஜீரோ பாய்ண்ட்டை வந்தடைந்தது.

zero point
author img

By

Published : Sep 28, 2019, 7:42 PM IST

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு-கங்கா ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் ஆண்டுக்கு 12 டிஎம்சி திறந்துவிடப்படுவது வழக்கம். கண்டலேறு அணையில் போதிய நீர் இல்லாததால் நீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் போதிய மழை இல்லாததாலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடக் கோரி ஆந்திர அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதினார்.

திருவள்ளூர் ஜீரோ பாய்ண்ட்

இந்த கோரிக்கையை அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திரா முலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் செப்டம்பர் 25ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டு படிப்படியாக ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணா நதிநீர் வான ஸ்வர்ணமுகி, காளாஸ்திரி, உப்பலமடுகு, சத்தியவேடு வழியாக 152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது. தமிழ்நாடு எல்லை வந்த கண்டலேறு அணை தண்ணீரை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பெஞ்சமின் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.

மேலும் ஜீரோ பாயிண்ட் வந்தடைந்த நீர் சுத்திகரிக்கப்பட்ட பின் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Intro:சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் வந்தடைந்தது. இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மலர்தூவி வரவேற்றார். சென்னை கொடுங்கையூரில் இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு மறுசுழற்சி செய்யும் திட்டத்திற்கு முதல்வர் வரும் செவ்வாய் அன்று அடிக்கல் நாட்டுகிறார் இதன் மூலம் 120mld சென்னை மக்களுக்காக குடிநீர் கிடைக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி.

Body:திருவள்ளூர் மாவட்டம் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறக்கப்படும் ஆண்டுக்கு 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவதாக ஆனால் ஒப்பந்தத்தின் படி இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் கண்டலேறு அணையில் போதிய நீர் இல்லாததால் நீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் போதிய மழை இல்லாததாலும் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடக் கோரி ஆந்திர அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். பின்னர் தமிழக அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடக் கோரி கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கடந்த 25ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டு படிப்படியாக ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கிருஷ்ணா நதிநீர் வான ஸ்வர்ணமுகி,காளாஸ்திரி, உப்பலமடுகு, சத்தியவேடு வழியாக 152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது. தமிழக அரசு சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். மேலும் ஜீரோ பாயிண்ட் இல் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வந்தடையும் அதனையடுத்து பூண்டியில் சேரும் நீரை புழல் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பின் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பி வைக்கப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தமிழக முதல்வர் கடிதம் மூலம் வைத்த கோரிக்கையை ஏற்று ஆந்திராவில் பெய்த தொடர் மழை காரணமாக கிருஷ்ணா நதிநீர் கடந்த 25ஆம் தேதி திறக்கப்பட்டது. அதன் மூலம் இன்று ஜீரோ பாயிண்ட் வரை வந்தடைந்து. இது விரைவில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் மேலும் ஆந்திராவில் மழை தொடரும் பட்சத்தில் தமிழக முதல்வர் நேரடியாக சென்று கோரிக்கை வைத்தார் எனவும் தெரிவித்தார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தண்ணீரை இழந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நன்றியை தமிழக அரசு சார்பில் தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு கொடுங்கையூர் கோயம்பேடு உள்ளிட்ட இரண்டு இடங்களில் மறுசுழற்சி செய்து குடிநீரை முதலில் 40ml டி அடிக்கல் நாட்ட உள்ளார் என்றும் இதனைத் தொடர்ந்து கோயம்பேடு விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார் எனவே இதனை அதிகரித்து 120ml வரை குடி நீர் மறுசுழற்சி செய்து நியமிக்க இருப்பதாக இதன் மூலம் சென்னை மக்களுக்கு எடுத்து என்று 180mld குடிநீர் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்தார் பருவ மழை பொய்த்துப் போனாலும் எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து சென்னை மக்களுக்கு 870mld குடிநீர் வினியோகிக்கும் முயற்சியை தமிழக அரசு செய்துள்ளதாக தெரிவித்தார்.

பேட்டி :
எஸ் பி வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.