திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் உள்ள கருமாரியம்மன் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ஆடி திருவிழா கடந்த ஒன்பது வாரங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கருமாரியம்மன், தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஓம் சக்தி என்ற கோஷங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தாரை என பல்வேறு கிராமிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.