ETV Bharat / state

மோடி ஆவணப்படமே வருமான வரி சோதனைக்கு காரணம்: கி.வீரமணி ஆவேசம் - Thiruvallur

குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான ஆவணப்படம் வெளியிட்டதற்காக பிபிசி நிறுவனத்தின் மீது ஒன்றிய அரசு வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளதாக திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

கி.வீரமணி கண்டனம்
கி.வீரமணி கண்டனம்
author img

By

Published : Feb 16, 2023, 10:49 AM IST

குஜராத் கலவர ஆவணப்படம்: பிபிசி வருமான வரித்துறை சோதனைக்கு காரணம் - கி.வீரமணி கண்டனம்

திருவள்ளூர்: சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப் பொதுக்கூட்டமானது திருவள்ளூர் ரயில் நிலையத்தில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று தலைமை உரை நிகழ்த்திய பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "ஒன்றியத்தில் இருக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும். யாரெல்லாம் தங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கிறார்களோ அவர்களின் பேச்சு சுதந்திரம் கருத்துரிமையைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.

குஜராத்தில் நடந்ததை பற்றி ஆவணப்படம் வெளியிட்டதற்காக பிபிசி ஊடகம் மீது ஒன்றிய அரசு வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளதாகவும். அதை மறுத்து அவர்கள் மீது வழக்குப் போடலாம் அல்லது அது உண்மை இல்லை என்று விளக்கம் அளிக்காமல். ஆனால் அதற்கு எதிர் மாறாக வருமானவரித்துறை சோதனை நடித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றார். இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்லுகின்ற காலம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாஜக ஒன்றிய அரசுக்குப் பாடம் புகட்டுவார்கள் எனக் கூறினார்.

மேலும் வருகின்ற 2024 ஆண்டுகளுக்குப் பிறகு புதியதாக அமைய உள்ள ஒன்றிய அரசு சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாகச் செயல்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓமனில் சிக்கித்தவித்த 13 தமிழர்கள் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.