திருவள்ளூர் மாவட்டம் பழைய கும்மிடிப்பூண்டி பகுதியில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை, எதிர் வீட்டில் வசிக்கும் சிவக்குமார் என்ற நபர் கடந்த 2016ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்தார். குழந்தையின் அலரல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற தாயையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.
இது குறித்து சிறுமியின் தாய் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் சித்ரா ஆஜராகி வாதாடிய இந்த வழக்கில், 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது, குழந்தையிடம் அத்துமீறியது, கொலை மிரட்டல் விடுத்தது போன்ற பிரிவுகளின் கீழ் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 6,500 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் கூடுதல் தண்டனையும் விதித்து நீதிபதி பரணிதரன் தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: ஆணுறுப்பு சிதைக்கப்பட்ட நிலையில் சாலையில் கிடந்த இளைஞர்!