ETV Bharat / state

படிக்காமலேயே சாதிக்கலாம் என்று சொல்வது சூழ்ச்சி: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு! - stalin speech

”எண்ணும் எழுத்தும்” திட்டம் அடுத்த 3 ஆண்டுக்குள் அனைத்து தொடக்க கல்வி மாணவர்களுக்கும் சென்று சேரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

படிக்காமலே சாதிக்கலாம் என்று சொல்வது சூழ்ச்சி முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

author img

By

Published : Jun 13, 2022, 4:08 PM IST

Updated : Jun 13, 2022, 5:09 PM IST

திருவள்ளூர்: செங்குன்றம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ’எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கரோனா காலத்தில் 2 ஆண்டுகளாக இடை நின்ற கல்வியை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா வைரஸ் பரவல் காரணமாக, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வியில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நம்பியுள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு எழுத்துகளை அறிந்துகொள்வதில் கூட பிரச்னை இருப்பதாக ஆய்வு முடிவு மூலம் அரசுக்கு தெரியவந்துள்ளது.

இதற்காகத்தான் ’எண்ணும் எழுத்தும்’ என்ற பெயரில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தாங்களாகவே கல்வி கற்கும் வண்ணம் வகுப்பறைகள் மாற்றியமைக்கப்பட்டு, செய்முறைகள் மூலம் பாடத்தை சொல்லிக் கொடுப்பதற்கான திட்டம்தான், 'எண்ணும் எழுத்தும்' திட்டம்.

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் எளிய வகையில் புரிந்துகொள்ளும் வகையில் கதைகளுடனும் வண்ணப்படங்களுடனும் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதற்காக கடந்த ஒரு வாரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. எளிய முறையில் கணக்குகளை சொல்லித் தருதல், எளிய முறையில் அடிப்படை எழுத்துகளைப் புரிய வைத்தல் போன்ற அம்சங்கள் இந்த திட்டத்தில் உள்ளன என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு வகுப்பறையே விளையாட்டு பொருட்களால் நிரம்பி இருப்பது போன்று , அனைத்து தொடக்கப்பள்ளிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், 'பள்ளி திறக்கப்பட்டுள்ள இந்த நாளில் மாணவர்களுக்கு வாழ்த்துகள். சென்னையின் குடிநீர் தேவையைத் தீர்க்கும் இடம் புழல் ஏரி,
கரோனா ஊரடங்கு காலத்தில் கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாகத்தைத் தீர்க்கும் நீர் போல கல்வி தாகத்தை தீர்க்க இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.

ஒவ்வொரு குழத்தையும் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ’எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, ”எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்”, என்ற ஔவையார் பாடலை மேற்கோள்காட்டி முதலமைச்சர் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், 'அனைவருக்கும் கல்வி என்பது தான் திராவிட மாடல் அரசு. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் ரீடிங் மாராத்தான் என்ற சாதனையை தமிழ்நாடு மாணவர்கள் படைத்துள்ளார்கள்.

”எண்ணும் எழுத்தும்” திட்டம்

ஆடல், பாடல், கதை சொல்லுதல், பொம்மலாட்டம் என திட்டம் செயல்பட உள்ளது. இந்தத்திட்டத்தின் மூலம் குழந்தைகள் கவனச்சிதறல் இல்லாமல் கல்வி பயில்வார்கள். கல்வி என்பது யாராலும் திருட முடியாத சொத்து எனவும், அந்த சொத்தை உருவாக்கக்கூடிய திட்டம் தான் ’எண்ணும் எழுத்தும்’ திட்டம். மேலும், இந்தத் திட்டத்தால் படைப்பாற்றல், அறிவாற்றல், தன்னம்பிக்கை அதிகமாகும்.

’இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் தொடர் வாசிப்பு இயக்கத்தில் 200 கோடி சொற்களை அரசுப்பள்ளி மாணவர்கள் வாசித்துள்ளனர். இதற்காக மாணவர்களுக்கு வாழ்த்துகள், தன்னார்வலர்களுக்கும் பாராட்டுகள். ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் நோக்கம் சிதையாமல் காப்பாற்றும் பொறுப்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது.

தொடக்கவிழாவின்போது இருக்கும் அக்கறையும், ஆர்வமும் இறுதிவரை இருக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் வெற்றிவிழாவும் முக்கியம். அரசின் வெற்றியும் அதில் தான் இருக்கிறது. இல்லம் தேடிக்கல்வி, நான் முதல்வன், கல்வித்தொலைக்காட்சி வரிசையில் ’எண்ணும் எழுத்தும்’ திட்டமும் இணைந்துள்ளது.

உயர் கல்வி, ஆராய்ச்சியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உருவாவதற்கான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம். கல்வியால் வரும் பெருமையை எதனாலும் அழிக்க முடியாது. படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாக காட்டினால், படித்து சாதித்து லட்சம் பேரை நாம் கட்ட முடியும். படிக்காமல் சாதிக்கலாம் என்று யாராவது சொன்னால் அது தன்னம்பிக்கை ஊட்டுவதல்ல; சூழ்ச்சி. இவர்களெல்லாம் படித்து முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில் தவறான பாதையை காட்டும் செயல்.

முதலமைச்சராக இல்லாமல், தந்தையாக கேட்கிறேன். குழந்தைகள், மாணவர்கள் அனைவரும் படிப்பு, படிப்பு,படிப்பு என்று இருக்க வேண்டும். எண்ணும் எழுத்தும் ஆட்சியின் இரு கண்கள்’ எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் சுதர்சனம் சார்பில் வெள்ளியாலான செங்கோல் மற்றும் மார்பளவு கருணாநிதி சிலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடுக - முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Jun 13, 2022, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.