ETV Bharat / state

ஆரணி ஆற்றில் மாயமான இளைஞரை தேடும் பணி தீவிரம்!

author img

By

Published : Nov 27, 2020, 6:59 PM IST

திருவள்ளூர்: ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரணி ஆறு  ஆரணி ஆற்றில் இளைஞர் மூழ்கி உயிரிழப்பு  Youth drowns in Arani river  Arani river  ஆரணி ஆற்றில் இளைஞரின் உடல் தேடும் பணி தீவிரம்  Intensity of the search for the body of the youth who went missing in the Arani River
Youth drowns in Arani river

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெருவாயில் காலணி பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் ராஜாமணி (வயது 20). நிவர் புயலின் காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி ஆற்றில் குளிக்க தடைவிதித்து காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (நவம்பர் 27) ராஜாமணி தடையை மீறி தன் ஐந்து நண்பர்களுடன் புதுவாயில் அருகேயுள்ள ஆரணி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் காவல், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவரப்பேட்டை காவல்துறையினர், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, வட்டசியர் கதிர்வேல், கண்காணிப்பாளர் கல்பனா உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு உடலை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

இதையும் படிங்க:தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய ஆசிரியர் சடலமாக மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.