ETV Bharat / state

திருவள்ளூரில் தொழில் முதலீடுகள் மாநாடு; 3,912 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Tiruvallur news: திருவள்ளூர் மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாட்டில், 20 தொழில் நிறுவனங்கள் சார்பாக 3,912 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி
தொழில் முதலீடுகள் மாநாடு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 8:31 AM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில், நேற்று (நவ.29) நடைபெற்ற மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாட்டில், ரூ.822.83 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் சார்பாக, மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமை வகித்தார்.

இம்மாநாட்டில், மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் முன்னிலையில், 20 தொழில் நிறுவனங்கள் சார்பாக 3,912 நபர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில், ரூ.822.83 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அமைச்சர் ஆர்.காந்தி, 400 மஞ்சப்பைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கருக்கு இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: கோவை ஜோஸ்ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளையில் திடீர் திருப்பம்! கொள்ளையன் பொள்ளாச்சியில் பதுங்கலா? தனிப்படை அதிரடி வேட்டை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.