ETV Bharat / state

திருவள்ளூரில் 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு: மூவர் கைது!

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு தனியார் லாட்ஜில் பதுக்கி வைத்திருந்த 3 நாகலிங்க ஐம்பொன் சிலைகளை கைப்பற்றிய காவல் துறையினர், மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

திருவள்ளூரில் 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு, மூவர் கைது!

author img

By

Published : Oct 26, 2020, 10:56 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் தனியார் விடுதியில் சிலர் சிலைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் ஆர்.கே. பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்திர குமார் தலைமையில் காவல் துறையினர் லாட்ஜில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு அறையில் பதுங்கியிருந்த ஐந்து பேரில் இருவர் தப்பிய நிலையில் 3 பேர் மட்டும் காவல் துறையிடம் பிடிபட்டனர். இதனையடுத்து அந்த அறையில் காவல் துறையினர் நடத்திய சோதனையில் ஒரு அடி உயரமுள்ள மூன்று நாகலிங்க, ருத்ர சிலைகளை பறிமுதல் செய்தனர். சிலைகளை பதுக்கி வைத்திருந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாடசாமி, கருப்புசாமி, ஆந்திர மாநிலம் புத்தூரைச் சேர்ந்த முரளி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்க்கொண்டனர்.

இதில் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் ஐம்பொன் சிலைகள் வடிவமைக்க புத்தூரைச் சேர்ந்த சிற்பி முரளிக்கு பணம் வழங்கி சிலைகள் வடிவமைத்ததாகவும் அவற்றை ஆந்திராவிலிருந்து ஆட்டோவில் எடுத்து வந்து பள்ளிப்பட்டில் விடுதியில் வைத்து தூத்துக்குடியைச் சேர்ந்த மாடசாமி, கருப்புசாமி க்கு விற்பனை செய்ய இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகள் மதிப்பு 20 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐம்பொன் சிலைகள் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க...காய்ச்சலுக்காக சென்றவருக்கு தவறான சிகிச்சை; மருத்துவரால் கண் பார்வை இழந்த பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.