ETV Bharat / state

கொத்தடிமை தொழிலாளர்களின் முன்னேற்றம், பாதுகாப்புக்கான சமுதாயக் காவல் திட்டம் தொடக்கம்! - Protection of Mortal Workers

திருவள்ளூர்: கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் முன்னேற்றம், பாதுகாப்புக்கான சமுதாயக் காவல் திட்டம் தொடக்க விழா திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது.

protection-of-mortal-workers
protection-of-mortal-workers
author img

By

Published : Feb 28, 2020, 4:13 PM IST

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன், இந்து கலைக்கல்லூரி, நாசரேத் கலைக்கல்லூரி ஆகியவை ஒன்றிணைந்து ஏற்படுத்திய சமுதாய காவல் திட்டம் தொடக்கவிழா நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் நீதிபதி சரஸ்வதி, மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மெர்லின் பிரீடா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது அவர்கள் பேசுகையில், "கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்னை குறித்து ஆராய்ந்து தேவைகள் குறித்து ஆய்வு நடத்தப்படும். கொத்தடிமை தொழிலாளர்களின் தேவை, பிரச்னைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும். காவல் துறை அலுவலர்களுக்கும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்து மக்களோடு இணைந்து வாழ்வது குறித்து ஆலோசனை வழங்கப்படும்" என்றார்.

protection-of-mortal-workers

இந்நிகழ்ச்சியில் கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள், காவல் துறை அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அரசுக் கலைக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய ஷிப்ட் முறை அறிமுகம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.