ETV Bharat / state

கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது - கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒருவரை கைது செய்த கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

gummidipoondi police
illicit liquor preparation
author img

By

Published : May 20, 2020, 4:42 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் ஏரிக்கரையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வாளர் அமுல்ராஜ், துணை ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான மதுவிலக்கு காவல் துறையினர் குழு மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் பாலவாக்கம் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த கதிரவன் (வயது 30) என்பவர் சம்பவ இடத்தில் 50 லிட்டர் கள்ளச்சாராயத்துடன் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கதிரவனை விசாரணை மேற்கொண்டதில் இவருடன் முரளி என்பவர் சாராயம் காய்ச்சியதாக வாக்குமூலம் அளித்ததன் பேரில் முரளி என்பவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காமராஜர் சிலையை அவமதித்த மூவர் குண்டர் சட்டத்தில் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.