திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ராமநாதபுரத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து , அப்பகுதியில் காவல் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு டிராக்டர்கள் வேகமாக வருவதை அறிந்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர். ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட மணல் அந்த டிராக்டர்களில் இருப்பது உறுதியானது. இரண்டு டிராக்டர்களையும், மணலையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட சிவக்குமார், தயாளன் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொசஸ்தலை ஆற்றில் தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் பாதிக்கும் சூழ்நிலை இருப்பதால், மணல் கொள்ளையை தடுக்க காவல்துறையினர் தீவிர வாகன சோதனை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.