ETV Bharat / state

கும்மிடிப்பூண்டி பகுதியில் பார்களாக செயல்படும் பெட்டிக்கடைகள்.. காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 10:20 AM IST

Liquor illegal selling: கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 24 மணிநேரமும் சட்டவிரோதமாக மதுபானம், லாட்டரி, போதைப் பொருட்கள் விற்கும் பெட்டிக் கடைகளுக்கு சீல் வைக்க மதுரைக்கிளை உத்தரவிட்ட பின்னும், அத்துமீறி மது விற்பனை தற்போதும் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

liquor illegal selling
liquor illegal selling

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஐந்து சட்டம் ஒழுங்கு காவல் நிலையமும், ஒரு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையமும் செயல்பட்டு வருகிறது. மாதர்பாக்கம், பாதிரிவேடு, கவரப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய காவல் எல்லைக்கு உட்பட்ட பாதிரிவேடு, மாநல்லூர், எளாவூர், ஆத்துப்பாக்கம், சுண்ணாம்புகுளம், தச்சூர் போரக்ஸ் நகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் 24 மணிநேரமும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், தனியார் பார் உரிமையாளர் ஒருவர் அதிகாலை முதலே உரிமத்துடன் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும், அருகாமையில் செயல்படும் பார், உரிமம் இல்லாமல் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், டாஸ்மாக் கடையில் உள்ள மதுபானத்தின் நிறத்தைக் காட்டிலும், தனியார் பார்களில் விற்பனை செய்யப்படும் மது பானங்களின் நிறம் கூடுதலாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுமட்டுமல்லாது, பார்களில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களில் போதை அளவு அதிக அளவில் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட விஷ சாராய உயிரிழப்புகளை அடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உயிரிழப்பு ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்படைப் பிரிவு போலீசார், கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார், உளவுப்பிரிவு போலீசார் என பல பிரிவு போலீசார் இருந்தும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க முடியாமல் திருவள்ளூர் மாவட்ட போலீசார் திகைத்து வருகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத மதுபானம், லாட்டரி, போதைப் பொருட்கள் விற்கும் பெட்டிக் கடைகளைக் கண்டறிந்து சீல் வைக்க வேண்டும் எனவும், மேலும் காவல்துறை தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆணுறுப்பை அறுத்து கொலை.. தகாத உறவின் விபரீதம் - சேலத்தில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.